Monday, May 25, 2009
கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலி
5:52 PM
இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது தம்பிலுவிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்று முன் தினம் நள்ளிரவு அவரது சொந்தக் கிராமமான காரைதீவிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு நேற்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது .
பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போது அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று காரைதீவில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த வேளை அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து ஏராளமானோர் வருகை தந்து தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர் .தற்போது தம்பிலுவில் இல்லத்திலும் ஏராளமான மக்கள் தமது அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.இன்று மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.
This post was written by:
Adii Rockstar - who has written 18 posts on Gazette Edition.
In this space you can include a little "About the Author" section to inform your readers about the author's background and specific niches. It doesn't have to be long, but it doesn't need to be short either. Nice little feature to Gazette this, isn't it?
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலி”
Post a Comment